Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இது கட்டாயம் இல்லை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில்  நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு  கடன் உதவி வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 62 மாற்றுத்திறனாளிகளுக்கு 22 லட்சத்து 80 ஆயிரம்  ரூபாய் மதிப்பில் கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ” கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயமாக கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தொடங்கப்படும் வங்கி கணக்கு ஜீரோ பேலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் விவரங்களை உடனடியாக சேகரித்து வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று  வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.  இந்நிலையில் நமது தமிழ்நாட்டில் 2கோடி 23 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்
. அதில் 14 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே ரேஷன் கார்டில் வங்கி கணக்கில்  ஆதார் எண் இணைக்காமல் உள்ளனர். மேலும் 95 சதவீதம் பேர்  இணைத்த  நிலையில் மீதமுள்ளவர்களை  இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை. ரேஷன் கார்டில் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்பது இல்லை” என அவர்  கூறியுள்ளார்.

Categories

Tech |