நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் மக்களின் நலனை கருதி மத்திய அரசு சார்பாக அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனைப் போலவே மாநில அரசுகளும் அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு இலவசமாக வழங்கின. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பணவீக்கம் நிலவி வருவதால் உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை கருதி பிபிஎல் கார்டு அதாவது முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு அரசு இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் குடும்ப எண்ணிக்கையின் அடிப்படையில் 15 முதல் 150 கிலோ வரை இலவசமாக அரிசி பெற்றுக் கொள்ளலாம் எனவும் இந்த இலவச அரிசியை பெற விரும்பும் ரேஷன் அட்டைதாரர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது