Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இன்னும் 1 வருஷத்திற்கு இலவசம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது மக்களுடைய தேவையை கருத்தில் கொண்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

அதன்படி கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம்  2023 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து இன்று பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், ”இன்னும் ஒரு ஆண்டுக்கு உணவு தானியங்கள் வழங்க ஆகும் 2 லட்சம் கோடி செலவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்” என்றார்.

Categories

Tech |