தமிழகத்தில் ரேஷன் அட்டையில் மாற்றம் செய்வதற்கு, புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பதற்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்கு மற்றும் சேர்ப்பதற்கு நாம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நான் அனைத்தையும் செய்து கொள்ளவதற்கான வசதி இருந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இணையதள சேவை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற காரணத்தினால் இந்த இணையதளம் மீண்டும் சேவைக்கு இயக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள. எனவே, இனி இணையதளம் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான எந்த மாற்றத்தையும் நாம் இணையதளத்திலேயே மேற்கொள்ள முடியும்.