Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!…. இனி இந்த கவலை வேண்டாம்….. வந்தது புது விதி…. மத்திய அரசு தடாலடி….!!!!

நம் நாட்டின் அனைத்து ரேஷன் அட்டை பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதன்படி இனிமேல் ரேஷன் கடைக்காரர்கள் பொருட்களின் எடையில் எவ்வித ஏமாற்று வேலையையும் செய்ய இயலாது. ஏனெனில் ரேஷன் கடைக்காரர்களுக்காக அரசு ஒரு புது விதியை நடைமுறைபடுத்தி இருக்கிறது. ஒரு புறம் அரசு இலவச ரேஷன் காலத்தை டிசம்பர் வரை நீட்டித்து உள்ளது. மற்றொரு புறம் மத்திய அரசின் லட்சியமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்” நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அரசின் இம்முடிவால் ஏற்பட்டுள்ள அனுகூலமான விளைவுகளும் கண்கூடாகத் தெரிகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக, ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல் சாதனங்களை இணைக்க மத்திய அரசானது உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை திருத்தி இருக்கிறது.

அதன்பின் அனைத்து ரேஷன் கடைக்காரர்களும் இனிமேல் மின்னணு தராசு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தின் பயனர்களுக்கு எச்சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் கிடைக்காமல் இருக்க, ரேஷன் டீலர்களுக்கு ஹைபிரிட் மாடல் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் ஆன்லைனிலும், நெட்வொர்க் இல்லாத பட்சத்தில் ஆப்லைனிலும் வேலை செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |