Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே உஷார்…. உடனே உங்க கார்டை சரண்டர் பண்ணுங்க…. அரசு எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் இலவச ரேஷன் பொருட்களை பெறும் தகுதி இல்லாத நபர்கள் உடனடியாக ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என்றும் இதைச் செய்யத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சூழலில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இலவசமாக ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்கியது.

இந்நிலையில் தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தகுதி இல்லாத நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் அதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி தகுதி இல்லாத நபர்கள் உடனடியாக தங்கள் ரேஷன் கார்டுகளை சரண்டர் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு தகுதி இல்லாத நபர்கள் ரேஷன் கார்டு வைத்துக்கொண்டு இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு பிரத்யேக ரேஷன் கார்டு வழங்கப்படுகின்றது. வருடத்திற்கு 10000 ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே இந்த ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது.

யாரெல்லாம் ரேஷன் கார்டு சரண்டர் செய்ய வேண்டும் தெரியுமா?

100 சதுர அடி சிட்க்கு மேல் நிலம், வீடு, பிளாட், கார், டிராக்டர் வைத்திருப்போர், கிராமங்களில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல்,நகரங்களில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோர் அனைவரும் தங்களது ரேஷன் கார்டை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |