Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே கவனம்…! இதனால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்…?

நாடு முழுவதும் சுமார் 15 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றார்கள் இந்த 15 கோடி பேரும் ரேஷன் கார்டு தொடர்பான இந்த செய்தியை கட்டாயம் தெரிந்து கொள்ளவும். அதாவது கடந்த 2020 ஆம் வருடத்தில் கொரோனா தொற்று நோய்களின் போது ஏழைகளுக்கான இலவச ரேஷன் வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. தற்போது மத்திய அரசு தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் மாதம் நிறைவடைகின்றது. இருப்பினும் அதனை முன்னெடுத்துச் செல்வது பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றது கடைசி நாட்களில் இலவச ரேஷன் திட்டத்தில் தகுதியற்றவர்களும் பயன் பெறுவதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற சூழலில் ரேஷன் கார்டு தாரர்கள் தொடர்பான விதிமுறைகளை அரசாங்க அவ்வபோது மாற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி சமீபத்தில் ரேஷன் கார்டை ஒப்படைக்க தகுதியற்றவர்களிடமிருந்து அரசு முறையிடுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் ரேஷன் கார்டு ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைகள் பற்றி நிலைமையை தெளிவு படுத்திய உத்திரப்பிரதேச அரசு அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரரும் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை தெரிந்திருப்பது அவசியம் ஆகும். ரேஷன் கார்டு தவறாக வழங்கப்பட்டு அரசு ரேஷன் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டால் புகாரின் பேரில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் அதேபோல இந்த விசாரணையில் புகார் உண்மை என தெரிய வந்தால் உங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனால் தற்போது ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை தெரிந்து கொள்வோம். அதாவது இலவச ரேஷன் பொருட்கள் விதியின்படி கார்டுதாரர்களின் வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் பிளாட் அல்லது வீடு இருந்தால் நான்கு சக்கர வாகனம், டிராக்டர், ஆயுத உரிமம் அல்லது கிராமத்தில் 2 லட்சத்திற்கு மேல் மற்றும் நகரத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சம் உங்களுக்கு வருமானம் இருந்தால் நீங்கள் இலவச ரேஷனுக்கு தகுதியற்றவர்கள். இந்த ரேஷன் கார்டை உடனடியாக தாலுகா மற்றும் டி எஸ் ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் மேலும் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து செய்திகளுக்கும் மத்திய அரசும் உத்தரப்பிரதேச அரசும் அதனை மீட்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஏற்ப அவ்வ போது அவர்கள் தரம் பிரிக்கப்பட்டு வருகின்றார்கள். ரேஷன் கடை பயனாளிகள் அறிக்கையை அரசு தயார் செய்து கொண்டிருக்கிறது ஆனால் மீட்பு பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Categories

Tech |