அனைத்து இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது. இந்த ரேஷன் கார்டு வாயிலாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் அட்டை டிஜிட்டல் கார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்று 5 வகையான தரநிலை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இந்த ரேஷன் அட்டை வாயிலாக கொரோனா நிவாரண நிதி, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் குடும்ப அட்டையில் உறுப்பினர் பெயரை நீக்கம் அல்லது சேர்த்தல் செய்வதற்கு தற்போது ஆன்லைனில் எளிய வழிமுறைகள் இருக்கின்றன.
வழிமுறைகள்:
# ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலமாக பெயர் நீக்கம் செய்ய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
# இதையடுத்து வலைதளத்தில் “பயனாளர் நுழைவு” என்பதனை க்ளிக் செய்யவும்.
# அதன்பின் ரேஷன் கார்டில் எந்த தொலைபேசி எண்ணை இணைத்துள்ளீர்களோ அந்த எண்ணை, அங்குள்ள கட்டத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்து கேப்ட்சா (Captcha) எண்ணை கீழேயுள்ள கட்டத்தில் கொடுத்து, பதிவு செய் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# பதிவு செய்த பின் உங்களின் மொபைலுக்கு வரும் OTP எண்ணை உள்ளீடு செய்து “பதிவுசெய்” என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.
# குடும்ப நபர்கள், அட்டை எண், பெரியவர்/ சிறியவர் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப அட்டை செயலில் இருக்கிறதா என்பதன் விவரம் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.
# பெயர் நீக்கம் செய்வதற்கு இடதுபுறத்தில் “அட்டை பிறழ்வுகள்” என்ற தேர்வை க்ளிக் செய்ய வேண்டும். அதன்பின் புதிய கோரிக்கை என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.
# ரேஷன் அட்டை எண், குறியீடு எண் என்று அனைத்துமே சரிபார்க்கப்பட்ட பிறகு “சேவையை தேர்வு செய்” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# அதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டிருக்கும் சேவை தேர்வுகளில் “குடும்ப உறுப்பினர் நீக்க” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# குறிப்பிட்ட நபரை எதற்காக நீக்கம் செய்கிறீர்கள் என்று காரணத்தைக் குறிப்பிட வேண்டும்.
# திருமணமாகி சென்ற மகள், உயிரிழந்த அப்பா என்று குடும்ப உறுப்பினர் பெயரை எதனால் நீக்கம் செய்கிறீர்களோ அதற்கான “ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும்” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
# அடுத்ததாக உறுதிப்படுத்துதல் என்பதனை டிக் செய்து, “பதிவு செய்ய” என்பதை க்ளிக் செய்யவும். பின் 2, 3 தினங்களுக்குள் பெயர் நீக்கம் ஆகிவிடும். மேலும் இணையதளத்திற்கு சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.