Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே மறந்துராதீங்க….! நாளை காலை 10 மணிக்கு….. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக பலரும் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். ஒருசிலர் ரேஷன் அட்டையில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.

அந்தவகையில் ரேசன் கார்டில் மாற்றங்கள் மேற்கொள்ள சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |