ரேஷன் கார்டு தாரர்களுக்கு கூட்டுறவு துறை செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின் பேரில் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கணக்கு எடுக்கப்பட்டபோது 14, 86,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் அருகில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கை தொடங்க வேண்டும் எனவும் வங்கி கணக்கு திறக்கப்பட்டவுடன் ரேஷன் அட்டைதாரர் கணக்கின் விவரங்களை மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்பாக வங்கி கணக்கு வைத்திருந்தவர்கள் அதனுடன் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து கூட்டுறவு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது தமிழகத்தில் தற்போது ரேஷன் அட்டைதாரர்கள் 95 சதவீதம் பேர் வங்கி கணக்கு எண் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர். மேலும் ரேஷன் கார்டில் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இணைப்பதால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்ற நிலை தமிழகத்தில் இல்லை என கூறியுள்ளார்.