பலவிதமான புதிய விதிமுறைகளைக் கொண்டு வருவதன் மூலம் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்க இந்திய அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு செய்வதால் பயனர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாகக்க உதவுகிறது. மேலும் செயல்முறைகளை அங்கீகரிக்கவும், ஒழுங்குபடுத்தவும் அரசிற்கு பணி சுலபமாகியுள்ளது. இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக இருப்பது நிலையாகும். மத்திய அரசு நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் காடு முறையை அமல்படுத்தியுள்ளது. எனவே அந்த செயலியின் பயன்பாடு அவசியமாகிறது. மேலும் புலம்பெயர்ந்தோர் ரேஷன் பொருள்களை எங்கு சென்றாலும் பெற்றுக்கொள்ளமுடியும். எனவே மேரா ரேஷன் செயலி பதிவிறக்கம், எப்படி பயன்படுத்துவது மற்றும் பல முக்கிய அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்.
இந்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு முயற்சியை எளிதாக்குவதற்கு,இந்த அமைப்பு நாட்டில் உள்ள சுமார் 60 கோடி தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் பயனாளிகளை கொண்டுள்ளது. NFS சட்டத்தின் கீழ் PDS எனப்படும் பொது விநியோக முறையின் மூலம் எண்பத்தி ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஒரு கிலோவுக்கு 1 முதல் 3 ரூபாய்க்கு அதிக மானியத்துடன் கூடிய உணவு தானியங்களை அரசு அளித்து வருகிறது.
எனினும் பல புலம்பெயர்ந்தோர் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது இந்த பலனை அடைய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அதனால் மேரா பயனாளிகள் எங்கு சென்றாலும் அவர்கள் சிரமமில்லாமல் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த செயலியின் மூலம் அதில் உள்ள நியாய விலைக் கடைகளை ஒரு பயனர் எளிதாக கண்டறிய முடியும். பயனர்கள் உங்கள் சமீபத்திய பரிவர்த்தனைகள் மற்றும் உரிமை பற்றிய விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். நாடு முழுவதும் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு அமைப்பு மூலம் ரேஷன் கார்டு சேவைகளை வழங்குகிறது.
பதிவிறக்கம் செய்யும் முறை;
மேரா ரேஷன் செயலி தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் க்கு சென்று மேரா ரேஷன் கார்டு ஆப் என்று பதிவிட்டு தேடி எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் தேசிய தகவல் மையம் உருவாக்கிய செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைக்கிறது இருந்தாலும் கூட புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் செல்லும் இடங்களின் அடிப்படையில் இந்த செயலில் 14 வெவ்வேறு மொழிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. முதலில் நீங்கள் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்னதாக ரேஷன் கார்டை பெற்ற மாநிலத்தின் உணவு சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று உங்கள் ரேஷன்கார்டு செயலில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கூகுள் பிளே ஸ்டோர் க்கு சென்று மேரா ரேஷன்கார்டு பயன்பாட்டை தேடுங்கள்.
மேரா ryzen பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
இப்போது உங்கள் மொபைலில் பயன்பாட்டை திறந்து உங்கள் ரேஷன் கார்டை பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு பதிவு விருப்பத்தை தட்டி உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு சமர்ப்பி என்பதை அழுத்த வேண்டும். பயனர்கள் தங்களின் ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு “உங்கள் உரிமை விருப்பத்தை அறியவும்” என்பதைத் தட்டுவதன் மூலம் தங்கள் உரிமையை சரிபார்க்கலாம்.
ONORC தகுதியை சரிபார்க்கவும் செயலி அனுமதிக்கிறது. தகுதி அளவுகோல்களைத் தேர்ந்தெடுத்து தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் விவரங்களைச் சரிபார்த்து கொள்ளலாம்.
அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
NFSA பயனாளிகள் தங்கள் உணவு தானிய உரிமையை சரிபார்த்துக் கொள்ளலாம்.
உங்களின் கடந்த ஆறு மாத பரிவர்த்தனைகள் மற்றும் ஆதார் பதிவின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
செயலி முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும்.
உங்கள் அருகிலுள்ள நியாய விலைக் கடை (FPS) அல்லது அருகிலுள்ள ரேஷன் டீலரை எளிதாக கண்டறியலாம்.