Categories
பல்சுவை

ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்க வேண்டுமா?….. வெறும் 5 நிமிடம் போதும்…. வாங்க பார்க்கலாம்…..!!!!

ரேஷன் அட்டை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று தான். அதில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்க வேண்டும் என்றால் அது மிகவும் எளிது. திருமணமானவர்கள் தனியாக குடித்தனம் அமைக்கும் போது அவர்களுக்கு புது ரேஷன் அட்டை வாங்குவதற்காக இருவரின் பெற்றோரின் ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படுவது அவசியம். ஒருவரின் பெயர் ரேஷன் அட்டையில் இடம் பெற வேண்டும். பழைய ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும்போதே புதிதாக அட்டைக்கு விண்ணப்பித்தால் அது மோசடியாகும்.

அதனைப் போலவே ஒருவர் திடீரென இறந்து விட்டால் அவரது பெயர் ரேஷன் அட்டையில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். அதன்படி ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டில் இருந்து சில நிமிடங்களில் பெயரை நீக்கி விடலாம். தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.அதில் உங்களுக்கு தேவையான வழியைத் தேர்வுசெய்து அதனடிப்படையில் குறிப்புகளை கொடுக்க வேண்டும்.

1. இணையதளத்தில் முகப்புப் பக்கத்தில் ‘மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்’ என்ற ஒரு பகுதி இருக்கும். அதில் உள்ள தெரிவுகளில், `குடும்ப உறுப்பினர் நீக்க’ என்பதை க்ளிக் செய்யவும்.

2. திறக்கும் புதிய பக்கத்தில், பழைய ரேஷன் கார்டுடன் இணைந்துள்ள உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.

3. உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ பதிவிட்டு, ‘பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்யவும். உங்கள் ரேஷன் கார்டின் விவரங்கள் திரையில் தோன்றும்.

4, தொடர்ந்து இடதுபுறத்தில் உள்ள ‘அட்டை பிறழ்வு’ என்பதை க்ளிக் செய்யவும்.

5. பிறகு புதிய கோரிக்கைகள் என்பதை க்ளிக் செய்யவும்.

6. திறக்கும் பக்கத்தில் உங்களது ரேஷன் கார்டு எண் மற்றும் நியாய விலைக் கடையின் குறியீட்டு எண் ஆகியவை தோன்றும். அதற்குக் கீழே ‘சேவையைத் தேர்ந்தெடுக்கவும்’ என்ற ஒரு தெரிவு கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ‘குடும்ப உறுப்பினர் நீக்க’ என்பதை க்ளிக் செய்யவும்.

7. பிறகு, தகுந்த ஆவணத்தை அப்லோடு செய்ய வேண்டும். திருமணமான பெண் அல்லது ஆணின் பெயரையோ நீக்க திருமணச் சான்றிதழை பதிவேற்றவும். இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்கு இறப்புச் சான்றிதழை பதிவேற்றவும்.

8. ‘காரணம்’ தலைப்புக்குக் கீழே உள்ள கட்டத்தில், எதற்காகப் பெயரை நீக்குகிறீர்கள் என்பதை பதிவிடவும். தொடர்ந்து, நீக்க வேண்டிய பெயரை டிக் செய்து, `உறுதிப்படுத்துதல்’ என்ற தெரிவை அழுத்தவும்.

9.பிறகு, ‘பதிவு செய்ய’ என்று தோன்றும் தெரிவை க்ளிக் செய்யவும்.

10. கோரிக்கை வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டால், பச்சை நிறத்தில் `டிக்’ மார்க் திரையில் தோன்றும்.

உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்குவதற்கு விண்ணத்தாகிவிட்டது. ‘விண்ணப்பம் பதிவிறக்கம்’ என்பதை க்ளிக் செய்தால் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஓரிரு நாள்களில் உங்களது பெயர் நீக்கம் செய்யப்படும்.அதன் பிறகு ஓரிரு நாள்கள் கழித்து இந்த இணையதளத்துக்குச் சென்று ‘அட்டை தொடர்பான சேவை நிலை அறிய’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உள்ளே நுழைந்து உங்களது விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துக் கொள்ளலாம். உங்களது பெயர் நீக்கம் செய்யப்பட்ட உடன், ‘சான்றிதழ் பதிவிறக்கம்’ என்ற தெரிவை கிளிக் செய்து சான்றிதழை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளவும். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்கு அந்தச் சான்றிதழ் தேவைப்படும்.

Categories

Tech |