Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் பெயர் மாற்ற…. வெளியான அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 607 அட்டைகளில் பெண் குடும்பத் தலைவர்களாக உள்ளனர். மீதமுள்ள அட்டைகளில் ஆண் குடும்ப தலைவராக இருக்கின்றனர். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டம் விதிகள் 2017 இன் படி ஆண் குடும்பத் தலைவராக உள்ள ரேஷன் அட்டைகளை பெண் குடும்ப தலைவராக மாற்ற வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை சேலம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் எடுக்கபட்டு வருகிறது. எனவே ஆண் குடும்பத் தலைவரை கொண்டிருக்கும் ரேஷன் அட்டையை மாற்ற அருகில் உள்ள ஈ-சேவை மையத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க சரியான ஆவணங்கள் மற்றும் ஏற்கனவே இருக்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு மற்றும் குடும்பத்தில் உள்ள 18 வயது நிறைவடைந்த பெண் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |