ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- யுஐடிஏஐ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
அதற்கு அடுத்ததாக start now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
UIDAI இணையதள பக்கத்தில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரி அனைத்தையும் பதிவிடுங்கள்.
அதன் பிறகு திரையில் தோன்றும் ஆப்ஷன்களில் இருந்து உங்கள் ரேஷன் அட்டையின் வகையைத் தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் ரேஷன் கார்டு எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகிய விவரங்களை பதிவு செய்க.
உடனே உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் otp எண்ணை பதிவிடவும்.
அதன் பிறகு இறுதியாக ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும்.
உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு உங்களுடைய ரேஷன் அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்.