Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டை திருத்தம், புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க…. மதியம் 1 மணி வரை தான்…. சீக்கிரம் போங்க…!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்ப அட்டையில் மாற்றம் செய்தல், பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் முறைகள் குறித்து எடுத்துரைக்க ஒவ்வொரு மாதமும் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும். அந்தவகையில் இந்த மாதத்திற்கான குறை தீர்க்கும் முகாம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொண்டு ரேஷன் கடைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் பதிவு செய்தல் உள்ளிட்ட மாற்றங்கள் செய்து கொள்ளலாம். மேலும் பொது விநியோக கடையில் செயல்பாடுகள் அனைத்தும் இந்த முகாமில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். சென்னையில் மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு வேண்டுபவர்கள் இருக்கும் இந்த முகாமில் விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கு விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, எல்பிஜி சிலிண்டர் ரசீது அல்லது குத்தகை ஒப்பந்தம் ஆகியவற்றை கொண்டுபோய் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தனியாக வசிப்பவர்கள் தங்களுடைய பெயர் பாதுகாவலர் அல்லது பெற்றோர் கார்டில் இருந்தால் அதில் இருந்து அகற்றி தனியாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளலாம். இதற்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதிக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |