Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி மாவு…. விதிமுறையை மீறிய ஆலை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறையை மீறி செயல்பட்ட ஆலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் கிராமத்தில் அல்லாபிச்சை என்பவர் வசித்துவருகிறார்.இவர் தனக்கு சொந்தமாக மாவு மில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அல்லாபிச்சையின் மாவு மில்லில் ரேஷன் அரிசியை அரைத்து விற்பனை செய்வதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் ஆகியோர் சம்பந்தப்பட்ட மில்லுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது ரேஷன் அரிசியை  அரைத்து மாவாக விற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் அதிகாரிகள் அங்கிருந்த 8 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்ததோடு ஆலையைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அல்லாபிச்சையை  கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |