Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

ரேஷன் கடைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 18 ம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின்  முதல் முழுமையான பட்ஜெட் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இதனையடுத்து இன்று காலை 10 மணியிலிருந்து பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலை கடையில் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?  என தெற்கு ரயில்வே உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி திருப்பூரில் நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 1000 அட்டை உள்ள நியாய விலைக் கடைகளை பிரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும்  உறுதியளித்துள்ளார். இந்நிலையில் 150 ரேஷன் அட்டைகளுக்கு  பகுதிநேர கடைகளும், 200க்கு மேல் இருந்தால் முழு நேரக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |