Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடைகளில் அடுத்த 5 மாதத்திற்கு…. இலவசமாக 5 கிலோ கூடுதல் அரசி…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் உணவு பாதுகாப்பு திட்டம் மூலம் பொதுமக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கி வருவது குறித்து சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனில், தென் மண்டல இந்திய உணவு கழக இயக்குனர் நசீம் மற்றும் தமிழக பொது மேலாளர் சைஜூ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பஞ்சாப், ஹரியானா, மாநிலங்களில் அரிசியை கொள்முதல் செய்து, நம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் கடந்த ஏப்ரல் 20 முதல் நவ 20 வரை பிரதம மந்திரி கரிப் கல்யாண்  திட்டத்தில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும் மத்திய அரசு 18 ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்து, 1 கிலோ அரிசிக்கு 38 வரை செலவு செய்கிறது. அதனை மாநில அரசுகள் அரிசி 3 ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது. இந்நிலையில் கொரோனா நேரத்தில் 80 கோடி மக்களுக்கு எப்போதும் வழங்கப்படும் 5 கிலோ அரிசியை விட கூடுதலாக 5 கி. அரசி வழங்க தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.அதன்படி தமிழகத்தில் 1 கோடி 12 லட்சம்குடும்ப , கூடுதலாக 5 கிலோ அரிசியை கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை இலவசமாக வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.  அதேபோல் இரண்டாம் அலையின் காரணமாக, மே, ஜூன் மாதத்தில் மீண்டும் இந்த திட்டத்தின் கீழ் அரிசியை இலவசமாக வழங்க தொடங்கி விட்டதாக கூறினார்.

எனவே கொரோனா காரணமாக, 16.5 லட்சம் டன் அரிசி, 7 ஆயிரத்து 588 கோடி மதிப்பில், இலவசமாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த 5 மாதத்திற்கு இலவசமாக, கூடுதலாக 5 கிலோ அரசி  வழங்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். இதற்காக கூடுதலாக 9 லட்சம் டன் கொண்டு வர உள்ளதாகவும், அதில் 8.5 லட்சம் டன் அரிசியும், 91 ஆயிரம் டன் கோதுமையும் கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

 

Categories

Tech |