Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் ஆக-31 க்குள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமானதாக இருப்பதாக சுட்டிக் காட்டினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதி படைத்த சிலர் பெற்றிருப்பதும், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகள் வசதி இல்லாதவர்கள் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். இது குறித்து ஆய்வு செய்து குளறுபடிகள் நீக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .

மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான அரிசியை வழங்க தமிழ்நாடு அரசு உறுதி ஏற்றதாகவும், ரேஷன் கடைகளுக்கு அரிசி அரிசி விநியோகம் செய்யும் ஆலைகள் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் கலர் ஷேடிங் செய்யும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிட்டுள்ளதாகவும் சக்கரபாணி தெரிவித்தார். மேலும் ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |