தமிழகம் நியாயவிலைக் கடைகளில் பராமரித்து வைக்க வேண்டிய அறிவிப்பு பலகைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் அடிப்படையில் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதாவது, வேலை நேரம், இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விபரம், விநியோகம் செய்யப்பட்ட விபரம், விற்பனை விலை உள்ளிட்டவை பலகையில் இடம்பெற வேண்டும்.
மேலும் விநியோகம் செய்தது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்கள், இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் விற்பனை விலை போன்றவை பலகையில் இடம்பெற வேண்டும். அதனை தொடர்ந்து நியாயவிலைக் கடை குறித்து புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர் 044 25671427, உணவுத்துறை செயலாளர் 044 25672224, உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் 044 28592255 உள்ளிட்டோரின் எண்கள் இடம் பெறவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.