தமிழகத்தில் குடும்பத்தில் இருக்கும் வேறு நபர்கள் யாரேனும் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்ப தலைவரின் கடிதம் கட்டாயம் தேவை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். வயதான , உடல்நிலை சரியில்லாதோருக்கு பதிலாக ஐந்து வயதை கடந்த யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறலாம் . ஆனால் அதற்கு குடும்பத் தலைவர் கடிதம் அளித்தல் அவசியம். அப்படி அளிக்கும்பட்சத்தில் கைரேகையை வைத்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலருக்கு கைரேகை பதிவாகாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைரேகை என்ற காரணத்திற்காக முதியோர்கள் அலைக்கழிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழக உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.