Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில்….. “விரைவில் வரப்போகும் புதிய நடைமுறை”….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடை வாயிலாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ளகியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு அதில் காட்டப்படும் பெயர்களில் உள்ளவர்கள் மட்டுமே கைரேகை பதிவு மிஷினில் விரல் வைத்து கைரேகை ஸ்கேன் செய்து பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் சில சமயங்களில் இந்த பயோமெட்ரிக் இயந்திர கோளாறு காரணமாக பொருட்கள் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதில் பல குளறுபடிகளும் நடக்கின்றது. எனவே இந்த முறை சரியாக நடக்கிறதா? என்பதை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கண்காணித்து வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் கடைகளில் பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |