Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 1000 ரூபாய்…… தமிழக மக்களே உஷார்….. நம்பாதீங்க….!!!!

ரேஷன் கடைகளில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக கூறிய யூடியூப் சேனல் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. அதில் சமையல் சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு உரிமை தொகை மாதம் 1000, முதியோர் ஓய்வூதியம் 1500 உள்ளிட்ட நிறைய வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக மகளிர்க்கு உரிமை தொகை ரூபாய் 1000 என்ற திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளதாக ஒரு பொய் தகவலை வெளியிட்டு தற்போது சிறைக்கு சென்றுள்ளார்.

சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் இன்று தனது செல்போனில் புதிய அறிவிப்புகள் என்ற youtube சேனலை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் பேசிய நபர் தமிழக அரசு புதிதாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று இது குறித்து கேட்டார். அப்போது இதுபோன்ற எந்த அறிவிப்பும் வரவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். பின்னர் அந்த youtube சேனல் மீது கார்த்திகேயன் புகார் கொடுத்தார்.

அதன் பெயரில் விசாரித்த போலீசார் யூடியூப் சேனல் நடத்தி வந்த நபரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் நடத்திய விசாரணையில் நியூஸ் சேனலில் வரும் செய்திகளை போட்டோ எடுத்து அதில் பொய்யான வாசகங்களை பதிவிட்டு வீடியோ போட்டு வந்ததாகவும், அப்படி செய்ததால் தான் அதிக வியூஸ் வரும் வருமானம் கிடைக்கும் என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அந்த youtube சேனலில் நடத்தி வந்த ஜனார்த்தன் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |