Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள்… மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு…!!!!!!

ரேஷன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியர் நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளின்படி 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட கலெக்டர்கள் நியமனம் செய்யும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவு பொருள் வளங்கள் அலுவலர் போன்றோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றிற்குப்  பின் இந்த தேர்வு நடவடிக்கை அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்க கூடும் என்ற காரணத்தினால் தேர்வு நடவடிக்கைகளை எந்தவிர புகாருக்கும் இடம் இன்றி நடத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு துறைகளும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிட வேண்டும் எனவும் நேர்முக தேர்வு நடைபெறும் நாட்களில் நேர்முக தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் மற்றும் கட்டண பணி இடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்று ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் ஆனது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது காலி பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள்ளும் அதன் பின் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலி பணியிடம் ஏற்படும் நாளிலிருந்து 90 நாட்களுக்கு முன்னரும் காலி பணியிடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களில் இருந்து பெற வேண்டும். மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் ஆனது அரசு பணியிடங்களுக்கு பின்பற்றப்படும் 200 இனசுழற்சி இட ஒதுக்கீட்டு விதிகள் முன்னுரிமை மற்றும் இதர நிதி முறைகள் தொடர்பான முறையில் உள்ள அரசாணைகள், சட்டப்பிரிவுகள் விதிகள் போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். நியாய விலை கடை உரிமையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் எனவும் கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |