Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதை தடுக்க வேண்டும்…. “கேமரா பொருத்துங்க” உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!!

அத்தியாவசிய பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க வேண்டும் … “கேமரா பொருத்துங்க” உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!!

சென்னை ஐகோர்ட்டில் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது,தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மொத்தம் 32, 722 ரேஷன் கடைகள் உள்ளன அதில் 1,97, 82, 593 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

2011 ஆம் ஆண்டு முதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கி வந்தது இதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரையையும் கோதுமையும் கிடைப்பதற்கு மாதம்தோறும் 35, 533 மெட்ரிக் டன் சக்கரையும், 34, 290 டன் கோதுமையும் கொள்முதல் செய்து விநியோகம் செய்கின்றனர்.கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா  வைரஸ் பரவல் காரணத்தினால்  மக்கள் அனைவரும் வேலையை இழந்து தவிக்கின்றனர்.

அதை கருத்தில் கொண்ட  அரசு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி, பருப்பு, எண்ணெய் கோதுமை , உள்ளிட்ட பொருட்களை வழங்கி வந்தது. இவ்வாறு வழங்கிவந்த பொருட்கள் முழுமையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடைக்காமல் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றது. இதனை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் கேமராக்களை பொருத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது விரைவில் இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

Categories

Tech |