கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ள கிராமத்தில் 16 வயது சிறுமி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி ரேஷன் கடைக்கு சென்ற பொது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இந்தச் சிறுமியே வெங்கடேஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கி பழகியுள்ளார். இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையில் சிறுமி கொரோனா பரவல் காரணமாக தனது தாயாருக்கு உதவியாக வீட்டு வேலை செய்வதற்காக கேராளவுக்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு சிறிது காலம் சொந்த ஊருக்குத் திரும்பி மீண்டும் வேலைக்காக கேரளா சென்று உள்ளார். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென சிறுமி மயங்கிக் கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிவித்தனர். அதன்பிறகு கர்ப்பமான பெண்ணுக்கு 18 வயது கூட நிரம்ப வில்லை என்பதால் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றினார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தமிழக போலிசார் சிறுமியை கர்ப்பமாக்கிய வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.