மதுரையில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக அரிசி கடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே நியாய விலை கடை அமைந்துள்ளது. இங்கு அரிசி மூட்டை மூட்டையாக பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மூன்று இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்களின் வாகனத்தில் நியாய விலை கடை ஊழியரே அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்று மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.