Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் அடிக்கடி பழுதாகும் பயோமெட்ரிக் எந்திரம்…. சிரமத்திற்கு உள்ளாகும் ஊழியர்கள், பொதுமக்கள்…!!!!!

தென்காசியில் உள்ள ரேஷன் கடையில் அடிக்கடி பயோமெட்ரிக் இயந்திரம் பழுதாவதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொருட்களை வாங்குவதற்கு தற்பொழுது பயோமெட்ரிக் முறை செயல்பட்டு வருகின்றது. மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடையில் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ரேகையை பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் எந்திரங்கள் அடிக்கடி பழுதாகி விடுவதால் பொருட்கள் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது. மேலும் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வெகு தொலைவில் இருந்து வருகின்றனர். இவ்வாறு எந்திரங்கள் பழுதாவதால் அவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இணையதள வாயிலாக செயல்படுவதால் இணைப்பு கிடைக்காமலும் பொருட்கள் வழங்க முடியாத சூழல் ஏற்படுகின்றது. இந்நிலையில் இதுபற்றி ரேஷன் கடை ஊழியர்கள் கூறியுள்ளதாவது, பயோ மெட்ரிக் முறையை மாற்றி கருவிழியை பயன்படுத்தி பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் இணையதள இணைப்பு சீராக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |