Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் அரசி வாங்குவது போல…. தமிழ்நாட்டின் நிலை உள்ளது – டி.ஆர் பாலு…!!!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு மீண்டும் வலியுறுத்த்தினார். இந்நிலையில் இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசிடம் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டுக்கு மட்டும் தடுப்பூசியை ஒன்றிய அரசு குறைத்து வழங்குகிறது. ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல ஒன்றி அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |