Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் முறைகேடு….. “விற்பனையாளருக்கு சிறை தண்டனை”….!!!!!

ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார் அடைக்கலம். இவர் நியாய விலை கடையில் முறைகேடு செய்ததாக புதுக்கோட்டை குடிமைபொருள் வழங்கல் துறையினர் வழக்குப்பதிவு செய்தார்கள்.

பின் இந்த வழக்கானது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டதில் அடைக்கலத்திற்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் ஜாமின் மூலம் விடுதலை பெற்றதாக போலீசார் கூறியுள்ளனர்.

Categories

Tech |