தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவாலி எனும் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் அரிசி வாங்க சென்றவர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதில் சிலர் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.