Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை…… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…..!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் முன்னோடி திட்டமான பொது விநியோகத் திட்ட பணிகளை எந்தவித குறைபாடும் இல்லாமல் பணியாளர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. பொதுமக்களுக்காக தொடர்ந்து சேவை செய்து வரும், அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்க ஆண்டிற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழக மக்கள் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோக செய்து வரும் நியாயவிலை கடைகளில் முன்கள பணியாளர்களுக்கு அப்பல்லோ மருத்துவ குழு உடன் இணைந்து உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக சென்னை தெற்கு மண்டலத்தில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் நடத்தும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு கடந்த ஜூன் 26 ஆம் தேதி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை வடக்கு மண்டலத்தில் உள்ள நியாய விலை கடை பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நேற்று நடைபெற்றது. இந்த முகாமை தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் 432 ஆண், 295 பெண்  பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

Categories

Tech |