ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் அரிசி வழங்கும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு செய்வதற்காக இந்த ஊக்கத்தொகையை கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.