Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. ரேஷன் கடை ஊழியர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு காரணமாக ரேஷன் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு மாறாக அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை நாளாக அறிவிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஜனவரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

அப்போது ரேஷன் பொருட்கள் வழங்குவது தாமதமாக துவங்கியதால் விடுமுறை நாளான ஜனவரி 30-ஆம் தேதி ரேஷன் கடை செயல்பட்டது. இதனால் மார்ச் 19 ஆம் தேதியான நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் கடை நாளை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |