திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான புத்துணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு புத்துணர்வு முகமானது நடைபெற்ற நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்.
மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 1112 ரேஷன் கடைகளை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சியானது கொடுக்கப்படுகின்றது என அவர் பேசினார். இதையடுத்து ஆட்சியர் விற்பனை பணியை திறம்பட செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். மேலும் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, துணை பதிவாளர்கள், கூட்டுறவு சார் சார்பதிவாளர்கள், அரசு அலுவலர்கள் என பலர் இந்த பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.