Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் மீது புகார் அளிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!!!!

ஏழைகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் நாட்டில் எந்த குடிமகனும் பட்டினி கிடக்க கூடாது என்பதற்காகவும் அவர் வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு தானியங்களை பெறுவதற்கும் அரசாங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. அந்த வகையில் அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் அல்லது குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் பலமுறை ரேஷன் கார்டுகள் வைத்திருந்தும் ரேஷன் ஊழியர்கள் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க மறுத்து வருகின்றார்கள்.இதுபோன்ற நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அதனால் ரேஷன் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது ரேஷன் கார்டு தாரர்கள் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.

அதேபோல மாநிலத்தின் அந்தந்த இணையதளத்திற்கு சென்று மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்துக் கொள்ளலாம். நீங்கள் புகார் பதிவு செய்யும்போது  ரேஷன் என்னுடன் ரேஷன் டிப்போ பற்றிய தகவலையும் தெரிவிக்க வேண்டும். இது தவிர அந்தந்த மாநில அரசுகளுக்கு தனி மின்னஞ்சல் ஐடிகளும் இருக்கும் அதன்படி மின்னஞ்சல் முகவரியின் உதவியுடன் ரேஷன் கிடைக்கவில்லை என நீங்கள் புகார் செய்து கொள்ளலாம். அதே சமயம் ரேஷன் கார்டு தொடர்பான அரசின் இணையதளத்தை பார்வையிட்டு கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவித்துக் கொள்ளலாம். புகார் அளிப்பதற்காக ஹெல்ப்லைன் நம்பர்கள் அதாவது இலவச உதவி மைய எண்களை அரசு வழங்கியிருக்கிறது. இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு காணப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன் தொடர்பான புகார்களை 1800 425 5901 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல ஆன்லைனிலும் உங்கள் புகார்களை பதிவு செய்து கொள்ளலாம் www.tnpds.gov.in என்ற உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அதிகாரத்துறை இணையதளத்தில் புகாரை பதிவு செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உதவி மைய என்னை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

Categories

Tech |