Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு கேட்டு… பொதுமக்கள் கலெக்டரிடம் மனு…!!!

குறைதீர் கூட்டத்தில் ரேஷன் கடை கேட்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு கேட்டும் பொது மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் நெல்லை அருகில் பாலாமடை இந்திரா நகரில் வசித்து வந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் தங்கள் ஊரில் ரேஷன் கடை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. எனவே ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை  நாங்கள் திரும்ப ஒப்படைக்க போகிறோம் என்று கூறி கலெக்டர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். உடனே காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க சொன்னார்கள். அதன் பின் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் ஊரில் 200-க்கு அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளார்கள். தற்போது நாங்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றோம். இதனால் முதியோர்கள் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே எங்கள் ஊரில் பொது இடத்தில் அமைந்துள்ள பல்நோக்கு கட்டிடத்தில் ரேஷன் கடையை அமைத்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

இதேபோன்று மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நெல்லை டவுன் பகுதி மக்கள் மண்வெட்டி, இரும்பு சட்டியுடன் அங்கு வந்து  நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு  கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் நகர் பகுதிகளுக்கு தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால் நகர் பகுதியில் வேலையில்லமால் சிரமப்படுகின்ற  எங்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பினை கொடுக்க  வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |