தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் நாளை முதல் 3 நாட்கள் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் தோற்கடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் இரண்டாம் தேதி முதல் மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடும்பத்திற்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வரவேண்டும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.