நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள ரேஷன் அட்டைகளில் 25% பேர் மட்டுமே ரேஷன் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் . இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு, இதற்கு முதலில் அரசின் https://tnpds.gov.in/ அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களை கொடுத்து கேப்ட்சா எழுத்துக்களை பதிவு செய்தால் ஓடிபி வரும்.
இதனை தொடர்ந்து அந்த ஓடிபியை தேவையான இடத்தில் கொடுத்து மற்றொரு பக்கத்தில் உள்நுழைய வேண்டும். இப்பொழுது, உங்கள் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் இருக்கும்.
அதில், ஆதார் விவரங்களை பதிவு செய்யாவிட்டால், ஸ்கேன் என்பதை தேர்வு செய்து ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.