நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள அட்டையாக ஆதார் கார்டு உள்ளது. அதனைப் போல ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான அடையாளமாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது. அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியமான ஆவணம். அத்தகைய ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம், மாற்றம் உள்ளிட்ட வேலைகள் இருந்தால் அதனை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளும் வகையில் அரசு வசதிகளை செய்துள்ளது. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படும் ரேஷன் அட்டையில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
குடும்பத்திலுள்ள யாருடைய விபரமாவது விடுபட்டிருந்தால் அதனை உடனே பதிவேற்றம் செய்வது அவசியம். அந்த வகையில் குழந்தைகளின் பெயர் தான் ரேஷன் கார்டில் இடம்பெறாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த நிலையை உடனே சரி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதன்படி ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பதற்கான எளிய வழிமுறைகளை தற்போது பார்க்கலாம்.
அதற்கு முதலில் www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
அதன் பிறகு ஒரு பிரத்தியேக ஐடி உருவாக்க வேண்டும்.
அடுத்து தோன்றும் பக்கத்தில் Add new member என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தவுடன் ஒரு படிவம் திறக்கும். அந்தப் படிவத்தில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பதிவிட வேண்டும்.
அதன்பிறகு பூர்த்தி செய்த படிவம் மற்றும் படிவத்துடன் கோரப்பட்ட ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் சமர்ப்பித்த பின்னர் வழங்கப்படும் பதிவு எண்ணை வைத்து அதே இணையதளத்தில் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு ரேஷன் கார்டு தபால் மூலம் வீட்டிற்கு வந்து சேரும். இதன் மூலமாக உங்கள் வீட்டில் உள்ள குடும்பத்தாரின் பெயரை எளிதாக ரேஷன் கார்டில் இணைக்கலாம்.