Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை ஆன்லைனில் ஈஸியா இணைக்கலாம்…. இதோ எளிய வழிமுறைகள்…..!!!!

இந்திய அரசாங்கத்தால் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள்  மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் அட்டையிலுள்ள குடும்ப நபர்கள், வயது போன்றவற்றின் அடிப்படையில்தான் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அரசு தரும் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொள்ள ரேஷன் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு அரசு வழங்கியுள்ள ரேஷன் கார்டுகள் அவசியமானதாகும். ரேஷன் கார்டு என்பது ஆதார் அட்டையை போலவே ஒரு தனி நபரின் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.

இதில் ஒவ்வொரு ரேஷன் அட்டையிலும் குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும். தற்போது ஒரு குடும்பம் வளரும் போது புதியதாக வரும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆன்லைனில் எளிதில் சேர்க்க முடியும். அதிலும் குறிப்பாக திருமணம், குழந்தை பிறப்பு ஆகியவற்றின் மூலமாக ரேஷன் அட்டைகளில் புதிய நபரை இணைக்க வேண்டியது அவசியமாகும். அந்த அடிப்படையில் ரேஷன் அட்டையில் புதிய நபர்களை சேர்க்க சில ஈஸியான ஆன்லைன் வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதற் கட்டமாக சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படும்.

அந்த அடிப்படையில் குழந்தையின் பெயரை சேர்க்க

# குடும்பத் தலைவரின் புகைப்படம் நகலுடன் அசல் ரேஷன் அட்டை

# குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

# பெற்றோரின் ஆதார் அட்டை

புதிதாக திருமணமானவரின் பெயரைச் சேர்க்க

# புதிய குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை

# திருமண சான்றிதழ்

# புதிய உறுப்பினர் பெற்றோரின் ரேஷன் அட்டை

இப்போது ஆன்லைனில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க

# மாநில உணவு விநியோகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

# உள்நுழைவு ஐடியை உருவாக்க வேண்டும்

# அல்லது உங்களிடம் முன்பே ஐடி இருந்தால் அதில் உள்நுழையவும்

# புதிய உறுப்பினரைச் சேர்ப்பதற்கான விருப்பம் முகப்பு பக்கத்தில் தோன்றும், அதை கிளிக் செய்ய வேண்டும்.

# அப்போது ஒரு புதிய படிவம் தோன்றும்

# உங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினர் குறித்த அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும்

# தேவையான ஆவணங்களின் நகலை பதிவேற்ற வேண்டும்

# படிவத்தை சமர்ப்பித்த பின் உங்கள் படிவத்தை கண்காணிக்க பதிவு எண்ணை பெறுவீர்கள்

# இப்போது புதிய ரேஷன் அட்டை தபால் மூலமாக உங்கள் வீட்டிற்கு வந்து சேரும்.

Categories

Tech |