Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!

ரேஷன் கார்டில் உங்களது பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, முகவரி, பெயர், வயது மற்றும் மொபைல் எண் போன்றவற்றின் தகவல்கள் விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்படுகின்றன. சில காரணங்களால் மக்கள் தங்களது மொபைல் எண்ணை மாற்றுகின்றனர். மாற்றப்பட்ட அந்த மொபைல் எண்ணை ரேஷன் அட்டையில் அப்டேட் செய்வது அவசியமாகும்.

மொபைல் எண் மூலமாகவே ரேஷன் கார்டு  தொடர்பான அனைத்து தகவல்களும் எம்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது. இதுபோன்ற சூழலில் உங்களது ரேஷன் கார்டில் உள்ள மொபைல் எண்ணைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் உணவுத் துறைக்கு தனி போர்டல் உள்ளது. அதன் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து விண்ணப்பங்களும் வீட்டிலிருந்தபடியே செய்யப்படுகின்றன.

நீங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றால், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உணவுத் துறை போர்ட்டலில் ’Aadhar Number of Head of Household / NFS ID’, ‘Ration card No’, ‘Name of Head of HouseHold’, ‘New Mobile Number’ ஆகிய தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த நான்கு விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, நீங்கள் Save என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்களது மொபைல் எண் புதுப்பிக்கப்படும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனி வலைத்தளம் உள்ளது. எனவே உங்களது மாநிலத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று ‘Register / Change of Mobile No’ என்பதில் மொபைல் எண்ணை மாற்றலாம்.

Categories

Tech |