இந்தியாவின் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கோதுமை,அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்தின் வருவாயைப் பொறுத்து ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்நிலையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அனைத்து ரேஷன் கார்டுகளிலும் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அரசு ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் கார்டு எடுக்கும் தகுதியுள்ள குடும்ப நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தர நிலைகளில் மாற்றங்களை செய்து வருகிறது. இந்த புதிய தரநிலை மாற்றங்கள் தயாராக உள்ளதாகவும், விரைவில் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என்றும் உணவு மற்றும் பொது வினியோகத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் 80 கோடி பொதுமக்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் பொருளாதார நிலையில் அதிகமாக உள்ளவர்களும் உள்ளனர். சாதாரண மக்கள் ரேஷன் கடைகள் மூலம் பெறும் பயன்களை அவர்களும் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை கருத்தில் கொண்டு பொது வினியோக அமைச்சகம் தர நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்ய உள்ளது. இனிமேல் புதிய தர நிலை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றப்படும். இதுவரை ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டிசம்பர் 2020 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இனி ரேஷன் கடைகளில் புதிய தரநிலை அமலுக்கு வந்த பிறகு தகுதி உடையவர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.