Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த கிராமம் மக்கள்… எதற்கு தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பழனி அருகில் உள்ள பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் நரிக்குறவர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தட்டி கேட்டபோது பிரபாகரன்(30), ரசிகன்(37), மணிகண்டன்(39), பின்னி(38), விஜயேந்திரன்(33), ஷாலினி(22) ஆகியோர் நேற்று முன் தினம் இரவு தாக்கப்பட்டனர். இவர்கள் பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் போதை ஆசாமிகளால் நரிக்குறவர் காலனி சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

இது குறித்து புகார் அளித்தும் போலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி பழனி தாலுகாலத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இதனையடுத்து அவர்கள் தங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நரிக்குற காலணியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தகராறில் ஈடுபட்ட சூர்யா, முத்து ஆகியோரை கைது செய்யப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |