Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுகள் விரைவில் முடக்கம்… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் ரேஷன் அட்டைகள் விரைவில் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. மக்களின் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டி வருகின்றது. அதன் நோக்கமும் ஏழை மக்கள் பயனடைய வேண்டும் என்பதுதான். ரேஷன் பொருள்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்று விடாமல் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

இந்தத் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் அனுமதி அளிக்க மறுத்து விட்டதால் திட்டம் அப்படியே செயல்படுத்தப்படாமல் உள்ளது. அது மட்டுமல்லாமல் ஏராளமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் கணக்கெடுக்கும் பணி களை அம்மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து அவை அனைத்தும் முடக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |