இந்தியாவில் மத்திய அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின்போது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது.
இதையடுத்து மற்ற மாநிலத்தில் வசிக்ககூடிய புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில்கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அனைவருக்கும் ரேஷன் கார்டு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மற்றொரு ஆவணமாக திகழும் ஆதார்கார்டை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயம் ஆகும். இதனை இணைப்பதற்கு ஜூன் 30ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார்-ரேஷன் இணைக்கும் வழிமுறைகள்
# முதலாவதாக uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
# அவற்றில் start now என்பதைக் கிளிக் செய்து உங்கள் முகவரி, மாவட்டம், மாநிலம் போன்றவற்றை நிரப்பவும்.
# அதன்பின் “ரேஷன் கார்டு பெனிபிட்” என்ற விருப்பத்தை கிளிக் செய்து அதில் உங்கள் ஆதார் அட்டையின் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை நிரப்பவும்.
# உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP ஐ உள்ளீட்டு இறுதியாக அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு ரேஷன்கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.