Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு….. எப்படி இணைப்பது….? ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்….. முழு விவரம் இதோ….!!!

இலவசமாக ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் இதை செய்ய வேண்டும். அது என்னவென்றால் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்தியாவில் தற்போது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் ரேஷன் கார்டை வைத்து எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும், ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.  இன்னமும் பலர் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காமல் வைத்துள்ளனர். நீங்கள் விரைவில் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் மற்றும் ஆப்லைனில் இதனை செய்யலாம் . ரேஷன் கார்டை ஆதாருடன் எப்படி இணைப்பது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

ஆன்லைனில் ரேஷன் கார்டை ஆதாருடன் எப்படி இணைப்பது:

முதலில் ஆதார் இணையதளமான uidai.gov.in செல்ல வேண்டும். இப்போது இணையத்தை தொடங்கு என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். மாவட்டம், மாநிலம் உள்ளிட்ட உங்களது முழு முகவரியையும் கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் ரேஷன் கார்டு என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து உங்களது ரேஷன் கார்டின் எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை கொடுக்கவேண்டும். படிவத்தில் நீங்கள் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபி-யையும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு விண்ணப்பித்தல் வெற்றிகரமாக முடிந்து விடும். பிறகு உங்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டு ஆதார் அட்டையுடன் உங்கள் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு ஒரு அறிவிப்பாக வரும்.

ஆஃப்லைனில் ஆதாருடன் இணைப்பது எப்படி:

ஆதார் அட்டையின் நகல் மற்றும் உங்கள் ரேஷன் அட்டையின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லை என்றால் உங்கள் வங்கி பாஸ்புக்கின் நகலை எடுத்துக்கொள்ளவும். குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அந்த ஆவணங்களை ரேஷன் அலுவலகம் அல்லது பொது விநியோக அமைப்பு கடையில் சமர்ப்பிக்கவும்.  ஆதார் தரவுத்தளத்துடன் நீங்கள் கொடுத்த தகவல்களை சமர்ப்பிக்கவும். உங்களது கைரேகையை அலுவலர்கள் கேட்கலாம். தொடர்ந்து ஆவணங்கள் சம்பந்தப்பட்ட துறையை அடைந்ததும் உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அலுவலர்கள் உங்கள் ஆவணங்களை சரிபார்த்ததும் ரேஷன் கார்டு வெற்றிகரமாக ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு விடும்.

Categories

Tech |