இந்தியாவில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து தற்போது மத்திய அரசு வெளி மாநில தொழிலாளர்களை கருத்தில்கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிமாநில ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு ரேஷன்கார்டு தொடர்பான விதிகளை மாற்றியமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
அதன்பின் உத்திரபிரதேசத்தில் ரேஷன்கார்டு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள் தங்களின் ரேஷன் கார்டை ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் பரவியது. அவ்வாறு ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பை உத்தரபிரதேச அரசு மறுத்துள்ளது. ஆகவே இது போன்ற உத்தரவை பிறப்பித்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அத்துடன் இது குறித்து முழு விளக்கமும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில் ரேஷன்கார்டு பற்றிய விதிகள் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தன் சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் பிளாட் (அல்லது) வீடு, 4 சக்கர வாகனம் வைத்திருந்தால் ரேஷன் திட்டத்தை பயன்படுத்திகொள்ள முடியாது. அதேபோன்று குடும்ப வருமானம் கிராமத்தில் 2 லட்சத்துக்கும் மேல் இருந்தால், நகரத்தில் 3 லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவர்களும் பயன்பெற முடியாது என உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஜூன் 19 முதல் 30 வரை கோதுமைக்கு பதில் 5 கிலோ அரிசி விநியோகிக்கப்பட்டது. இந்த முறையும் அதே போல வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.