ரேஷன்கார்டு பயனாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகளானது பலவித சலுகைகளை அறிவிக்கிறது. அண்மையில் மத்திய அரசானது இலவச ரேஷன் எனும் திட்டத்தினை டிசம்பர் மாதம் வரையிலும் நீட்டித்தது. இதையடுத்து மாநில அரசுகளும் ரேஷன் பயனாளர்களுக்கு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பலவித அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் உத்தரபிரதேசம் அரசு, ரேஷன் பயனாளர்களுக்கு தீபாவளிபரிசு வழங்கி இருக்கிறது. தீபாவளியையொட்டி ரேஷன் பயனாளர்களுக்கு இனிப்புகள் தயாரிக்க அரசு சலுகை விலையில் சர்க்கரை வழங்க இருக்கிறது.
அம்மாநிலத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் விநியோகமானது அக்டோபர் 20ம் தேதி முதல் இலவசமாக தொடங்கியது. இந்த முறையும் பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதில் அரிசி வழங்கப்படும். அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷன்விநியோக நேரம் சீரில்லாமல் போனது. ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன், அக்டோபரில் விநியோகம் செய்யப்படும். மாநில அரசின் சார்பாக ஆகஸ்ட் மாதத்துக்குரிய ரேஷன் விநியோகப் பணிகளை அக்டோபர் 20ம் தேதிமுதல் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் அக்டோபரில் கார்டுதாரர்களுக்கு சலுகை விலையில் சர்க்கரையும் விநியோகம் செய்யப்படும். ரேஷன் விநியோகத்தின்போது, ஒரு யூனிட்டில் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இம்முறை அரசு தரப்பிலிருந்து அந்த்யோதயா கார்டுதாரர்களுக்கு 3 கிலோ சர்க்கரையும் வழங்கப்படும். இதில் சர்க்கரை கிலோ 18 ரூபாய்க்கு கிடைக்கும். உ.பி-யில் அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையானது சுமார் 41 லட்சமாகும். இதுதவிர்த்து தகுதியான வீட்டு ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கையானது 3.18 கோடியாகும்.