ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரேஷன் விதிகளில் அரசால் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இனி பயனாளிகள் ரேஷனை பெறுவதற்கு ஒரு முறை அல்ல இரண்டு முறை கட்டை விரலை ஸ்கேன் செய்ய வேண்டும் இந்த மாற்றத்தை மத்திய அரசு செய்திருக்கின்றது. மத்திய பிரதேச இந்த விதி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைக்கு பின் கடை நடத்துபவர் முன்பை விட ரேஷன் விநியோகத்தில் அதிக நேரம் எடுத்து கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மத்திய பிரதேசத்தின் மாநில அரசால் பயனாளிகளுக்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இது தவிர பிரதான் மந்திரிக் கல்யாணி யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஐந்து கிலோ ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது இரண்டு ரேஷன்களும் கட்டுப்பாட்டு கடையிலிருந்து விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை பயனாளிகள் கட்டை விரலை வைத்தவுடன் ரேஷன் பெற்று வந்தனர். ஆனால் தற்போது இரண்டு ரேஷனையும் பெறுவதற்கு இரண்டு முறை கட்டை விரலை பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.